SCAS முன்னாள் மாணவர்கள் பிரம்மாண்டமான ஒன்றுகூடல்



மோகனூர் சுப்பிரமணியம் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடி மகிழக்கூடிய சந்திப்பு வரக்கூடிய ஜனவரி 19ஆம் தேதி, ஞாயிறு அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கல்லூரி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை படித்த மாணவர்கள் திரளாக கலந்துகொண்டு மகிழக்கூடிய ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரியின் தாளாளர் முனைவர் பழனியாண்டி அவர்கள் கூறும்பொழுது இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற வேண்டும் எனவும், ஜனவரி 19ஆம் தேதி வரக்கூடிய முன்னாள் மாணவர்களை வரவேற்க ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் ஏற்பாடு குறித்து கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறும்போது இந்த நிகழ்வு வாழ்நாளில் நினைவு கூறக்கூடிய அளவில் இருக்க வேண்டும்  என்ற ரீதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பகிர்ந்து கொண்டார்.

கருத்து பரிமாற்றம், விளையாட்டு, தொழில்  வேலைவாய்ப்பு குறித்த செய்திகள் என பலதரப்பட்ட விஷயங்களுடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான உணவு, அன்பளிப்பு உள்ளிட்ட  அனுசரணைகளை பவளம் இன்டர்நேஷனல் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி சச்சின் என்கிற செந்தில் அவர்களும், சாந்தமுருகன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் தலைவர் காரவள்ளி சேகர் அவர்களும் இணைந்து செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விபரங்களுக்கு 9965312347, 9840583683, 9360132525 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இப்படிக்கு,
முன்னாள் மாணவர்கள் சங்கம்
சுப்ரமணியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மோகனூர்

மகிழ்ச்சிக் கடலில் 1999-2002 மாணவர்கள்

சுப்ரமணியம் கல்லூரியில் 1999-2002 ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவ-மாணவிகள் 20.10.2019 அன்று கல்லூரி வளாகத்தில் கூடி மகிழ்ந்தனர். தங்களது கல்லூரிக் கால நினைவுகளில் திளைத்தனர்.

இக்கல்லுரியில் பயின்ற மாணவ-மாணவிகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதாக தாளாளர் முனைவர் பழனியாண்டி அவர்கள் பெருமிதம் தெரிவித்தார்.